Tamil Nano Chair Project
FAQ
எந்த அமைப்பின் திட்டம் இது ?
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றமும், மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கையும் இணைந்து வழங்கும் திட்டம் இது.
.
பொதுவாக, தமிழிருக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன?
தெளிவாகப் புரிந்துகொள்ள, ஒன்றின் பின் ஒன்றாகச் செயல்களைக் காண்போம்.
(1) புரவலர் ஒருவர், ஒரு கல்வி / ஆய்வு நிறுவனத்தைத் தெரிவு செய்வார். (2) ஒரு பெரும் தொகையை (1 லட்சம் முதல், 10 லட்சம் வரையில் (மேல் அதிகமாகவும்) அந்த கல்வி / ஆய்வு நிறுவனத்தின் தலைவரிடம் காசோலையாகப் புரவலர் வழங்குவார். (3) நிறுவனத்தின் தலைவர் அந்தத் தொகையை வைப்பு நிதியாக நிறுவனத்தின் பெயரில் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கியில் சேமிப்பார்.
(4) அந்த வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டி, வருடம் ஒரு முறை வங்கியிலிருந்து எடுக்கப்படும்.
(5) நிறுவனமும் சிறு தொகையை (தேவைப்பட்டால்) அதனுடன் சேர்க்கும்.
வருடத்திற்கு ஒரு நிகழ்வு நடத்தப்படும்.
(6) வைப்புத் தொகையை வழங்கியவர் தொகையை திரும்பப் பெற முடியாது.
(7) ஒரு முறை கொடுத்த தொகை, காலம் உள்ளவரை இருக்கும்.
எங்கு இருக்கைகளை உருவாக்க முடியும் ?
கல்வி / ஆய்வு நிறுவனத்தில்
.
யாரிடம் தொகையை வழங்க முடியும் ?
பல்கலைக்கழகமாக இருந்தால் துணைவேந்தரிடம்; ஆய்வு நிலையமாக இருந்தால் அதன் தலைவரிடம்.
.
பொதுவான கணக்கியல் நிலைகள் என்ன ?
உதாரணமாக 1,00,000 ரூபாய்க்கு ஒரு இருக்கையை நிறுவினால், 6 % வட்டி என வைத்துக் கொண்டால், வருடத்திற்கு 6,000 ஆயிரம் ரூபாய் வந்து சேரும், நிகழ்வும் அந்த அளவுத் தொகைக்கு ஏற்ப நிகழ்த்தப்படும்.
.
மேற்கண்ட அமைப்பில் உருவாகக் கூடிய இடர்பாடுகள் என்ன ?
.
சூழல் ஒன்று –
ஏதேனும் காரணத்தால் செயல்படாத அல்லது சுணக்கத்துடன் செயல்படும் துறைத்தலைவர் பதவிக்கு வரும் நிலையில் இந்தத் திட்டம் படு மோசமான தாழ்வினைச் சந்திக்கும். குறிப்பிட்ட காலத்தில் நிகழ்வு நிகழாமல், மிகத் தாமதமாக நிகழ வாய்ப்புள்ளது.
.
சூழல் இரண்டு –
1,00,000 ரூபாய்க்கு ஒரு இருக்கையும், 5,00,000 லட்சம் ரூபாய்க்கு ஒரு இருக்கையும் இரு வேறு புரவலர்களால் நிறுவப்பட்டால், மிக நெருக்கமான கால கட்டத்தில் நிகழ்வுகளை நடத்தும் சூழல் ஏற்படின் – இரு நிகழ்வுகளையும் ஒன்றாகச் சேர்த்துக் கணக்கு காட்டும் சூழல் உருவாகும்.
.
பெரிதின் முன் சிறிது சிறிதாகவே இருக்கும். பெரிய இருக்கை சிறிய இருக்கையின் பிம்பத்தை மறைவாக அழுத்தும்.
.
தமிழ் நானோ தமிழிருக்கை எவ்வாறு மற்ற இருக்கைகளிலிருந்து மாறுபடுகிறது ?
இப்போதுள்ள இருக்கைகள் | மெய்நிகர் தமிழிருக்கை |
கல்லூரிகள் / ஆய்வு நிலையங்களில் நிறுவப்படும். | மெய்நிகராக International Applied Tamil Team குழுமத்தின் மேற்பார்வையில் நிறுவப்படும். |
வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படும் | மாதம் ஒரு நிகழ்வு, வருடத்திற்கு 12 நிகழ்வுகள் நடத்தப்படும். |
நிகழ்வுகள் பலவாறு அமையலாம் | நிகழ்வுகள் (1) மெய்நிகர் சொற்பொழிவு (Endowment Lecture), (2) தமிழ் நுண் பயிலரங்க விடிவில் அமையும் |
பொதுவாகத் தொகை (1Lakh,to 10 Lakhs Usually) அளவுகளில் இருக்கும். | 35,000 ரூபாய்க்கு ஒரு இருக்கையை உருவாக்க முடியும். அதற்கு மேல் ஒரு ரூபாயையும் மன்றம் ஏற்காது. |
யாருடைய பெயரில் நிறுவப்படுகிறதோ அது மாறாது. | நிறுவியவர் மாணடி சேரும் நிலையில், இருக்கை அவரது பெயரில் நினைவு இருக்கையாக மாறிவிடும். மரணம் இல்லாத பெருவாழ்வு அவரது நற்செயலுக்குக் கிடைக்கும். |
நிகழ்வுகளை நிறுவப்படும் அமைப்பின் தலைமை தீர்மானிக்கும் | நிகழ்வுகள் மாதத்தில் எந்த நாளில், எங்கு, யாரால் நிகழ்த்தப்பட வேண்டும் என்று புரவலர் மாதாமாதம் தீர்மானிக்கலாம். |
நிகழ்வின் கட்டுப்பாடு முழுவதும் இருக்கை அமைந்துள்ள நிறுவனத்திடம் இருக்கும். | நிறுவியவர் / நிறுவிய தமிழ்ச்சங்கம் கட்டுப்பாட்டினைப் பெரும் |
நிகழ்வின் அறிக்கை புரவலருக்கு வருடம் ஒரு முறை வழங்கப்படும் (வழங்கப்படலாம்) | வருடத்திற்கு 12 நிகழ்வுகள் நடத்தி, மாதா மாதம் அறிக்கைகளை நிறுவியவருக்கு மெய்நிகர் தமிழிருக்கை மின்னஞ்சல் மூலமாகத் தவறாமல் அனுப்பி வைக்கும். |
பலசமயம் இரண்டு அல்லது மூன்று நிகழ்வுகள் ஒன்றிணைக்கப்பட்டு நடத்தப்படும் | நிகழ்வுகள் தனித்தனியாக மட்டுமே நிகழ்த்தப்படும் |
எப்போதாவது நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படும் | நிகழ்வுகள் அனைத்தும் கட்டாயமாக காட்சிப்படத்தப்படும் (YouTube) |
ஆய்வறிக்கை நிகழ்வுகளுக்குப் பிறகு வழங்கப்படலாம் | வருடம் ஒரு முறை ஆய்வு நூலாக வெளியிடப்படும் |