ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் அழகிய தன்மைகள்

1. தலைவர் இல்லாத தமிழமைப்பு.

2. வரவு செலவு கணக்குகளை திறந்த புத்தகமாக உலகின் பார்வைக்கு 24 X 7 வைத்துள்ள தமிழமைப்பு

3. உறுப்பினர்களில் உயர்வு தாழ்வை திருக்குறள் 505 அடிப்படையில் அறிவிக்கும் அறிவியல் தமிழ் சார்ந்த இயக்கம்

4. ஐந்து அடுக்குகளில் இயங்கும் உயர்மட்டக் குழுவினரால் கண்காணிக்கப்படும் மாபெரும் தமிழமைப்பு.

7.  எழுதப்பட்ட தெளிவான சட்டதிட்டங்கள் (Standard Operating Procedures SOP), கையேடு (Manual) பெற்றுள்ள தமிழமைப்பு.   

8. பதிமூன்று கல்விசார்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வை பெற்றுள்ள தமிழமைப்பு. (November 2022)

9. ஐந்து நிலைகளில் உறுப்பினர்களை அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு உயர்த்தும் கட்டமைப்பு.

10. செலவுகளை வெளிப்படையாக (24 X 7 ) வெளியிடும் தெளிவு.

11. செல்வந்தர்கள்,அரசியல் தலைவர்கள் முன் மயங்கி நிற்காத கட்டமைப்பு.

12. 25+ திட்டங்களை முன்னெடுக்கும் மாமன்றம்.

13. குறிப்பிட்ட கால அளவில் சுழற்சி முறையில் மன்றத்தின் ஆளுமைகளைத் தெரிவு செய்வது

14. சினிமாக்காரர்களை முக்கியமானவர்களாக சித்தரிக்காமல் இருப்பது

15. உறுப்பினர் அனைவரும் திறன் வளர்க்க துணை செய்வது

16. எந்தப் பொறுப்பும், எப்பொழுதும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதனை தெளிவுபடுத்துவது.

17. ஆர்வமுள்ள தமிழர்கள் சந்தாவாக கட்டும் தொகையை அவர்களே மிக விரைவாக தமிழ்ப்பணி மூலமாக திரும்பிப் பெரும் வகையில் இஐங்கும் வடிவமைப்பு.   

Leave a Reply