appliedtamil@gmail.com

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் பற்றி உங்கள் மனதில் எழும் இயல்பான கேள்வி – பதில்

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்றால் என்ன ?
உலகம் முழுவதும் வாழும் (110+ நாடுகள், 10+ கோடி) தமிழர்களுக்கு பொதுவான ஒரு தமிழமைப்பு இது. தலைவர் இல்லாத, சாதி மதப் பாகுபாடு இல்லாத, நாடுகள் சார்ந்த பிரிவுகள் இல்லாத, சினிமாத்துறை அரசியல் துறை ஆளுமைகளை உள்ளடக்காத – அறிவுசார் அமைப்பு இது.

மன்றம் யாரால் எப்பொழுது துவங்கப்பட்டது ?
டாக்டர் மு.செம்மல் அவர்களால் ஒரு நாள் சந்தாவான ஒரு ரூபாயுடன் 22.11.2017 அன்று துவங்கப்பட்டது.

மன்றத்தின் நோக்கம் என்ன ?
மன்றத்தின் நோக்கத்தை
(1) உடனடி நோக்கம்,
(2) நெடுநாள் நோக்கம் என்று இரண்டாகக் காண்போம்.

(1) உடனடி நோக்கம்: உலகம் முழுவதும் வாழும், தமிழ்ப்பணிகளில் ஈடுபடும் தமிழர்கள், தமிழமைப்புகள் ஆகியவற்றிற்கு தேவையான அறிவுசார் மற்றும் நிதி உதவியை வழங்குவது.

(2) நெடுநாள் நோக்கம்: தமிழர்களின் தமிழுணர்வை, தமிழ் மொழிப்பற்றை சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்தி, காலப்போக்கில் தமிழர்களுக்கு தமிழ் மீது வெறுப்பை உண்டாக்கும், நிதி நிலைகளில் தவறான உதாரணமாக இருக்கும், அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு தமிழை அற்ப விலைக்கு விற்றுவிடும் – தனி மனிதர்களை, குழுக்களை – நல்வழிப் படுத்துவது. அவர்களுக்கு அறத்தின் வலிமையை உணர்த்துவது.

தமிழ்ச் சமூகத்தில் நிறைந்துள்ள (பரவியுள்ள) நோயுள்ள – தமிழைத் தாழ்வாக ஏற்கும் சிந்தனைகளை (உயிரணுக்களை) அகற்ற வேண்டியது நம் கடமை. இந்தப் பெரும் பணியை இந்த மன்றம் அருவமாகச் செய்யும். நோயுள்ள உயிரணுக்களை (சிந்தனைகளை) உள்ளாக இயக்கத்தில் வைத்துக்கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் எவ்வளவு துணை செய்தாலும், அது முழுமையான பயனைத் தராது. ஆகையினால், நோயுள்ள உயிரணுக்களை (சிந்தனைகளை) அய்யனார் (அயலான்) சிந்தனை நிலையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று அகற்ற இந்த மன்றம் துணை செய்யும்.

தமிழைத் தாழ்வாக ஏற்கும் சிந்தனைகளை (உயிரணுக்களை) இந்த மன்றம் எவ்வாறு அகற்றும் ?
110 நாடுகளில் வாழும் தமிழர்களிடையே பல ஆயிரம் எண்ணிக்கையில் தமிழ் சங்கங்கள் உள்ளன இவற்றுள் பல அற்புதமான சிறப்பான செயல்பாடுகளைச் செய்கின்றன, அவை நல்ல உயிரணுக்கள் போன்றவை, அவற்றுக்கு தேவையான ஊட்டத்தை இந்த மன்றம் வழங்கும் இதன் விளைவாக அவை தழைக்கும், வெற்றி பெறும். ஆனால், தமிழைத் தாழ்வாக ஏற்கும் சிந்தனைகளை (உயிரணுக்களை) பெற்றுள்ள தமிழர் போர்வையில் இயங்கும் சிலர் புற்றுநோய் பாதித்த உயிரணுக்கள் போல தமிழ்ச் சமூகத்தில் கலந்துள்ளனர். அவர்களை திருத்தவேண்டியது நம் கடமை. இந்த மன்றத்தின் செய்லபாடுகளால் இது தானாகவே நிகழும்.
தமிழை உண்மையாக நேசிப்பவர்கள் மகிழ்வாக இருக்கத் துணை செய்யும் இம்மன்றம். தமிழைத் தாழ்வாக ஏற்கும் சிந்தனைகளை (உயிரணுக்களை) சிந்தனைகளைப் பெற்றுள்ள இம்மன்றத்தின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நோக்கி மடை மாற்றும்.

யார் மன்றத்தின் தலைவர் ?
யாருமே இல்லை

யார் மன்றத்தின் பொருளாளர் ?
உறுப்பினர்கள் அனைவரும் மற்றும் Chief Finance Officer தலைமை நிதி நிர்வாகியாக உள்ளார்.

பொருளாதாரத்தை வெளிப்படையாக வெளியிடுவது எவ்வாறு சாத்தியம் ? மொழி வளர்ப்பது இயல்பானது , நம்புங்கள்.
மறைவாக இயங்குவதற்கு என்ன தேவை உள்ளது ?

தலைவர் இல்லா நிலையில், முடிவுகளை எப்படி எட்டுவது ?
உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளது. அவர்கள் முடிவை எடுப்பார்கள். ஆதரவாகவும் , எதிராகவும் ஓட்டுகளைப் பதிவிட உயர்மட்டக் குழுவினர் அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது. முடிவுகளை ஏற்க 60% ஓட்டுகள் சாதகமாக அமைய வேண்டும்.

பொருளாதாரம் எப்படி கண்காணிக்கப்படும் ?
பொருளாதார கணக்குகள் நமது மெய்நிகர் அலுவலக (Applied Tamil Team Virtual Office) வெளிப்படையாக தினமும் வெளியிடப்படும். உறுப்பினர்கள் 24 X 7 இணையத்தில் எங்கிருந்தும் கணக்குகளைக் காணமுடியும்.

கணக்குகளை மேற்பார்வை செய்வது யார் ?
Chief Official Financial Advisor பதவியில் திரு அஷ்ரப் அலி (மணப்பாறை) உள்ளார்கள். கணக்குகளை அவர் மேற்பார்வை இடுவார்.

எவை மன்றத்துள் தடை செய்யப்பட்டுள்ளது ?
சினிமா, சிரிப்பு பட்டிமன்றம், அரசியல், சாதி மத நாடு சார்ந்த பிரிவினை போற்றும் உரையாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

மன்றத்தில் யார் சேரக்கூடாது ?
சினிமாத்துறை, அரசியலில் ஆழ்ந்து இருப்பவர்கள் மன்றத்தில் இணைவது தடை செய்யப்பட்டுள்ளது.

மன்றத்தில் இணைய சந்தா எவ்வளவு ?
1 நாளைக்கு 1 ரூபாய் (பொதுவானவர்கள்) (365₹ / Year)
1 நாளைக்கு 30 பைசா (தமிழ்த்துறை) (109.50₹ / Year)
1 நாளைக்கு 50 பைசா (மாணவர்கள் 12 – 18 வயது) (180₹ / Year)

என்னிடம் அதிகமாக பணம் இருக்கிறது நான் தினமும் நிறைய கொடுக்கலாமா ?
சந்தாவாக கொடுக்க முடியாது. மன்றத்தின் குறிப்பிட்ட திட்டங்களுக்கு உதவலாம், அவற்றிற்கும் கணக்குகள் வெளிப்படையாக உலகிற்கு வழங்கப்படும்.
நான் பெரும் அறிஞர் எனக்கு சந்தாவில் விதிவிலக்கு உள்ளதா ?
இல்லை

சந்தா காலம் முடிந்த பிறகு என்னுடைய உறுப்பினர் நிலை என்னவாகும் ? உங்களுடைய பெயர் மன்றத்தின் கோப்புகளில் தானாகவே நீக்கப்படும்

மறுபடியும் மன்றத்தில் சேர யாராவது என்னிடம் பேசுவார்களா ?
நாங்கள் கார்ப்பரேட் கம்பெனி நடத்தவில்லை ஆதலிலால் யாரும் உள்களிடம் “சந்தா செலுத்துங்கள்” என்று பின்தொடர்ந்து வந்து தாழ்ந்து நின்று பேச மாட்டார்கள், தேதியை நினைவில் வைத்திருப்பது உங்கள் கடமை.

தலைமை அலுவலகம் எங்குள்ளது ?
தமிழுக்கான வெள்ளை அறை , சென்னை அண்ணாநகர் , இந்தியா

அறிவியல் தமிழ் மன்ற அலுவலகத்தில் அனுமதிக்கப்படும் மொழிகள் என்ன ?
அறிவியல் தமிழ் மன்றத்தின் உள்ளாக (தமிழ் மட்டுமே). அறிவியல் தமிழ் மன்ற அலுவலகத்தில் (Office) (English and Tamil). உலக மக்களிடம் ஒரு ரூபாயை சந்தாவாக ஏற்கும் மன்றம் இது. வருடாவருடம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு வரி சார்ந்த கணக்குகளை (Auditing) நாம் செய்தாக வேண்டும்.. பல நாடுகளிலும் உள்ளவர்கள் இந்த மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள் பல நாடுகளில் Whatsapp உரையாடல்கள் கண்காணிக்கப்படும். பல நாடுகளில் பல நாட்டு அரசு அதிகாரிகள் இந்த மன்றத்தில் உறுப்பினர்களளாக உள்ளார்கள். அனைவருக்கும் புரியும் மொழிநடை மிக மிக அவசியம். தூய தமிழில் உரையாடல் செய்ய மன்றத்தில் உறுப்பினராக இணைவது சிறப்பு.

புற்றுள்ள உயிரணுக்கள் மெல்ல மெல்ல அழியட்டும் நல்லவை தழைக்கட்டும் அல்லவை நீங்கட்டும். ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றமானது, பொதுவான தமிழ் சார்ந்த அமைப்புகளிலிருந்து மாறுபட்டு, மிகவும் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டு 22.11.2017 அன்று உருவாக்கப்பட்டது. தலைவர், செயலாளர், பொருளாளர் என்று அறியப்படும் பதவிகள் அனைத்தையும் விட்டொழித்து உருவாக்கப்பட்டதுதான் இந்த மன்றத்தின் மீமிக முக்கியமான அமைப்பாகும்.
அரங்காலவர்கள், ஐம்பெருங்குழு (3 வருடப் பணி), எண்பெராயம் (3 வருடப் பணி), புரக்குழு (1 வருடப் பணி), அகக்குழு (1 வருடப் பணி) என்று தெளிவான கட்டமைப்பைக் கொண்டு மன்றம் இயங்கும். புதிதாக உயர்மட்டக்குழுவில் நுழைபவர்கள் 8 வருடங்கள் மன்றத்தின் உயர்வுக்கு முயல்வுகளை முன்வைக்கும் நிலையில் மட்டுமே அரங்காலவர்கள் நிலைக்கு உயர முடியும். ஒருவரின் செல்வமோ, பதவிகளோ, சாதியோ, மதமோ, வாழும் நாடோ, வயதோ – எதுவுமே ஒருவரை மற்றவரை விட உயர்வான நிலைக்கு சென்று நிற்க போதுமானதாக இருக்காது. அவரவர் மன்றத்தின் உயர்வுக்கு மேற்கொள்ளும் உழைப்பு மட்டுமே உதவும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் – திருக்குறள் 505

இந்தக் குறளை அடைப்படையாகக் கொண்டு மன்றம் உலகின் முதல் தமிழமைப்பு இது. யாரையும் சார்ந்து இம் மன்றம் இயங்காத காரணத்தால் மன்றம் என்றென்றும் இயங்கும். குறுக்கு வழியில் முன்னேறி புகழ்பெற விரும்பும் மக்கள் தாமாகவே பல்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டு மன்றத்தை விட்டு ஓடுவார்கள். யார் வந்தாலும், யார் சென்றாலும் அசையாமல் மயங்காமல் மன்றம் வாழும். யாரையும் நம்பி வாழ்வது தமிழல்ல, அப்படி யாரையாவது நம்பித்தான் வாழுமென்றால் அது தமிழாக இருக்கவே முடியாது என்று ஏற்கும் மக்கள் மட்டுமே உயர் மட்டக் குழுவில் நிலைப்பார்கள்.

“தமிழுக்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்” என்று மேடை முழக்கமாக மயங்கிக் கூறும் பழக்கம் கொண்ட மக்களை தமது வாழ்நாளில் முதல் முறையாக அறிந்துணர்ந்து தமது ஆழ் மனதின் ஆழத்தில் உண்மையின் வீரியத்தால் தூக்கி வீசப்பட்டு நெடிய தமிழின் முன் தலை தாழ்த்தி நிற்க வைக்கும் இம் மன்றம். பொய்த் தன்மை கொண்டவர்கள் இம்மன்றத்தின் படிகளில் மயங்கி சுருண்டு விழுவதைக் கண்டு சற்றும் சலனம் இல்லாமல் உயர்மட்டக் குழுவினர் முன்னோக்கி சென்று கொன்டே இருப்பார்கள். எம் உயிரான தமிழை எவர் தனியாகவோ கூட்டமாகவோ நீச மொழி என்று கூறினாலும், அழிக்க எண்ணினாலும் – உயர உயர எம் தமிழ் உயரும்.

ஆதி தமிழர்கள் கிராமங்களில் சிறுகுழுக்களாக பரிணமித்த பொழுது, தமது எதிரிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, கிராமத்து மக்களுக்கு தன்னம்பிக்கைக் கொடுக்க அய்யனார் உருவங்களை கிராமங்களில் எல்லைகளில் இருத்தி வைப்பார்கள். அதுபோலவே இம்மன்றமும் ஐய்யனாரின் நவீன வடிவத்தைக் கொண்டு (அயலான்) காக்கப்படும். சித்தர் வளர்த்த மொழி தமிழ் மொழி. அயலான் எனும் ஐய்யனார் சித்தர் வழி நின்று இம்மன்றத்தைக் காக்கும்.

110+நாடுகளில் 10+ கோடி தமிழர்களாக வாழும் நம் தமிழினம் உண்மையில் மாபெரும் பொருளாதார வளமை கொண்டுள்ள இனமாக உள்ளது. ஆனாலும், நம் இனம் தாழ்ந்து நிற்பதற்கு மீமிக முக்கியமான காரணி நமக்குள் இருக்கும் பிளவுகள். சாதி, மதம், நாடு, அரசியல், சினிமா,சில சமயங்களில் பிடித்த மெகா சீரியல் கூட நம்மைப் பிரிக்கிறது. இந்தப் பிரிவுகளை அகற்றுவது முக்கியம், ஆனால் இந்தப் பிளவுகளை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் சக்திகள் நமக்கு எதிராக என்றென்றும் நிற்கும். பிளவுகளுக்கு உள்ளாக – ஒரு கட்டமைப்பினை உருவாக்கும் முயற்சிதான் ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்.


உங்களுடைய விருப்பு வெறுப்பு என்னவாக இருந்தாலும் சரி, வாழ்த்துகள். அலுவலகம், மன்றம் என்று வந்துவிட்டால் ஒரு உறுப்பினர் என்கிற நிலையில் வாழுங்கள் வெளியே உங்கள் உள்ளத்திற்கு விருப்பமான திசையில் செல்லுங்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் தமிழ்ப்பணி செய்யுங்கள் அதற்கான செலவுகளை முடிந்தவரை மன்றம் ஏற்கும்.


உங்கள் சந்தாவினை செலுத்துங்கள் (தினமும் 1 ரூபாய்) அந்த சந்தாவை சேகரித்து தமிழ்ப்பணி செய்ய நேரம் உள்ளவர்களுக்கு மன்றம் வழங்கும் இந்தப் பணியை உயர்மட்டக் குழு மேற்கொள்ளும். எதார்தமாகப் பார்க்கும் நிலையில் உங்கள் ஆழ் மனதில் ஒரு கேள்வி எழும் “1 மனிதர் 1 நாளைக்கு 1 ரூபாய் என்றால்… நிறைய பேர் சேர்ந்தால் ?


சிறு துளி சிறு துளியே. ஆனால் நிறைய சிறு துளிகள் கடலாகவும் மாற வாய்ப்புள்ளது. அப்படி பெரும் தொகையாக மாறினால்…. உயர் மட்டக் குழுவினர் பணத்தை எடுத்துக்கொண்டு பல சீட்டுக் கம்பெனி நிறுவனங்கள் போல இரவோடு இரவாக ஓடி விட்டால் என்ன செய்வது ? என்கிற கேள்வி ஆழ் மனதில் வரும். அப்படி நிகழாமல் தடுக்கவே பல அடுக்குகளைக் கொண்ட மட்டக் குழுவினை மன்றம் பெற்றுள்ளது


ஒரு ரூபாய் கூட என்றும் வீணாகாது. தனது தினசரி வரவு செலவுக் கணக்குகளை Creative Common Domain நிலையில் வெளியிடும் தமிழ் மன்றம் நம்முடைய “ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்” http://shorturl.at/wFMPY
மன்றத்தின் வரவு செலவுக்கு கணக்குகளை உலகில் எங்கிருந்தும் எப்பொழுதும் (24X7) காண முடியும். உண்மையே எங்களுக்கு உயிர் போன்றது நேர்மையே எங்கள் வாழ்வியலின் அடிப்படை நாதம்

.

Leave a Reply