ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்றால் என்ன ?

அன்பானவர்களே, உங்கள் மனதில் எழும் இயல்பான கேள்விகளுக்கு இங்கு விடை உள்ளது. கற்க, சிந்திக்க, இணைய இவை உங்களுக்கு உதவும்.

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்றால் என்ன ?
உலகம் முழுவதும் வாழும் (110+ நாடுகள், 10+ கோடி) தமிழர்களுக்கு பொதுவான ஒரு தமிழமைப்பு இது. தலைவர் இல்லாத, சாதி மத பாகுபாடு இல்லாத, நாடுகள் சார்ந்த பிரிவுகள் இல்லாத, சினிமாத்துறை அரசியல் துறை ஆளுமைகளை உள்ளடக்காத – அறிவுசார் அமைப்பு இது.

கேள்வி : இந்த மன்றம் யாரால் எப்பொழுது துவங்கப்பட்டது ?

பதில்: டாக்டர் மு.செம்மல் அவர்களால் 1 நாள் சந்தாவான 1 ரூபாயுடன்  23.11.2017 அன்று துவங்கப்பட்டது.

கேள்வி : மன்றத்தின் நோக்கம் என்ன ?

பதில்: மன்றத்தின் நோக்கத்தை உடனடி நோக்கம், நெடுநாள் நோக்கம் என்று இரண்டாக காண்போம்.

உடனடி நோக்கம்: உலகம் முழுவதும் வாழும், தமிழ்ப்பணிகளில் ஈடுபடும் தமிழர்கள், தமிழமைப்புகள் ஆகியவற்றிற்கு தேவையான அறிவுசார் மற்றும் நிதி உதவியை வழங்குவது.

நெடுநாள் நோக்கம்: தமிழர்களின் தமிழ் உணர்வை, தமிழ் மொழிப்பற்றை தவறாக பயன்படுத்தி, தமிழர்களுக்கு தமிழ் மீதான வெறுப்பை உண்டாக்கும், நிதி நிலைகளில் தவறான உதாரணமாக இருக்கும், அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு தமிழை அற்ப விலைக்கு விற்றுவிடும் – தனி மனிதர்களை, குழுக்களை – தமிழமைப்புகளை சமூகத்தை விட்டு அகற்றுவது.

நோயுள்ள உயிரணுக்களை அழிப்பது நம் கடமை. அந்த பெரும் பணியை இந்த மன்றம் இலகுவாக மேற்கொள்ளும்.

நோயுள்ள உயிரணுக்களை வைத்துக்கொண்டு தமிழ்த்தாய்க்கு நாம் எவ்வளவு துணை செய்தாலும், அது முழுமையான பயன் தராது. ஆகையினால், நோயுள்ள உயிரணுக்களை அழிப்பது நம் கடமை. அந்த பெரும் பணியை இந்த மன்றம் இலகுவாக மேற்கொள்ளும்.

தவறான தமிழமைப்புகளை இந்த மன்றம் எவ்வாறு அழித்தொழிக்கும் ?
பதில்: 110 நாடுகளில் வாழும் தமிழர்களிடையே பல ஆயிரம் எண்ணிக்கையில் தமிழ் சங்கங்கள் உள்ளன இவற்றுள் பல அற்புதமான செயல்பாடுகளை செய்கின்றன, அவை நல்ல உயிரணுக்கள் போன்றவை, அவற்றுக்கு தேவையான ஊட்டத்தை இந்த மன்றம் வழங்கும் இதன் விளைவாக அவை தழைக்கும் வெற்றி பெறும். ஆனால், தவறான அமைப்புகளை உடைய சங்கங்கள் புற்றுநோய் பாதித்த உயிரணுக்கள் போல தமிழ் சமூகத்தில் கலந்துள்ளன. அவற்றை அழிப்பது இந்த மன்றத்தின் செய்லபாடுகளால் தானாகவே நிகழும். நல்லவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அச்சம் கொள்ள வேண்டியவர்கள் உடனடியாக திருந்துவது நல்லது.

கேள்வி: தமிழ்த்தாயின் உடலிலுள்ள தீய உயிரணுக்களாக எவற்றை நாம் குறிப்பிடுகிறோம்?
பதில்: நல்லவை எவை என்று தெளிந்தால் அல்லவை எவை என்று தானாகவே தெளிவு ஏற்படும்.

நல்ல தமிழமைப்புகளின் தன்மைகள் – (1) குறிப்பிட்ட கால அளவில் சுழற்சி முறையில் மன்றத்தின் ஆளுமைகளை (தலைவர் பொறுப்பு உட்பட) தெரிவு செய்வது (2) மன்றத்தின் நிதி அறிக்கையை வெளிப்படையாக உறுப்பினர்களுக்கு அளிப்பது (3) செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களை முன்னிலைப்படுத்தாமல் நிகழ்வுகளை நடத்துவது
(4) சினிமாக்காரர்களை முக்கியமானவர்களாக சித்தரிக்காமல் இருப்பது (5) உறுப்பினர் அனைவரும் திறன் வளர்க்க துணை செய்வது (6) உறுப்பினர்களின் கருத்துக்களை கவனிப்பது, ஏற்பது (7) எந்த பொறுப்பும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்று தெளிவுபடுத்துவது
இவற்றை செய்யும் அமைப்புகளுக்கு வாழ்த்துகள். ஒரு ரூபாய் மன்றம் உங்களுக்கு துணையாக இருக்கும், இவற்றை மேற்கொள்ளாத அமைப்புகள் தங்களின் வாழ்வியலை மாற்றிக்கொள்ளவும்.

புற்றுள்ள உயிரணுக்கள் மெல்ல மெல்ல அழிந்துவிடும்.நல்லவை தழைக்கட்டும் அல்லவை அழியட்டும்.

தவறான தமிழமைப்புகளை எவ்வாறு இந்த மன்றம் அழிக்கும் ?

தவறான அமைப்புகளில் வேறு வழியின்றி உறுப்பினர்களாக நின்று அவமானம் அடைந்து பொருளையும் இழந்து இருப்பவர்கள் நமது மன்றத்திடம் நிதி உதவியை நாடுவார்கள், நல்ல அமைப்புகளை அவர்களாகவே உருவாக்குவார்கள். புற்றுள்ள உயிரணுக்களுக்கு ஓடும் இரத்த ஓட்டத்தை, சர்க்கரை மற்றும் ஆக்சிஜன் அளவை குறைவாக மாற்றினால் புற்றுள்ள உயிரணுக்கள் மெல்ல மெல்ல அழிந்துவிடும்.நல்லவை தழைக்கட்டும் அல்லவை அழியட்டும்.

கேள்வி : யார் மன்றத்தின் தலைவர் ? பதில்: யாருமே இல்லை

கேள்வி : யார் மன்றத்தின் பொருளாளர் ? பதில்: உறுப்பினர்கள் அனைவரும்

கேள்வி : இது எப்படி சாத்தியம் ? பதில்: மொழி வளர்ப்பது இயல்பானது , நம்புங்கள்.

கேள்வி : தலைவர் இல்லாத நிலையில் , முடிவுகளை எப்படி எட்டுவது ? பதில்: உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டுரிமை பெறுவார்கள், அவர்கள் முடிவை எடுப்பார்கள்

கேள்வி: பொருளாதாரம் எப்படி கண்காணிக்கப்படும் ? பதில்: பொருளாதார கணக்குகள் முகநூலில் வெளிப்படையாக தினமும் வெளியிடப்படும். உறுப்பினர்கள் 24 X 7 கணக்குகளை காண முடியும்.

கேள்வி: கணக்குகளை மேற்பார்வை இடுவது யார் ? பதில்: Chief Official Financial Advisor பதவியில் திரு அஷ்ரப் அலி (மணப்பாறை) உள்ளார்கள். கணக்குகளை அவர் மேற்பார்வை இடுவார்.

கேள்வி: எவை மன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது ? பதில்: சினிமா, சிரிப்பு பட்டிமன்றம், அரசியல் , சாதி மத நாடு சார்ந்த பிரிவினை போற்றும் உரையாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: யார் சேரக்கூடாது ? பதில்: சினிமாத்துறை , அரசியலில் ஆழ்ந்து இருப்பவர்கள் மன்றத்தில் இணைவது தடை செய்யப்பட்டுள்ளது

கேள்வி: சந்தா எவ்வளவு ? பதில்: 1 நாளைக்கு 1 ரூபாய் (இந்திய பணம்) (பொதுவானவர்கள்), 1 நாளைக்கு 30 பைசா (இந்திய பணம்) (தமிழ்த்துறை),1 நாளைக்கு 50 பைசா (இந்திய பணம்) (மாணவர்கள் 12 – 18 வயதில்)

கேள்வி: என்னிடம் அதிகமாக பணம் இருக்கிறது நான் தினமும் நிறைய கொடுக்கலாமா ? பதில்: முடியாது.

கேள்வி: நான் பெரும் அறிஞர் எனக்கு சந்தாவில் விதிவிலக்கு உள்ளதா ? பதில்: இல்லை

கேள்வி: சந்தா காலம் முடிந்த பிறகு என்னவாகும் ? பதில்: உங்களுடைய பெயர் மன்றத்தின் கோப்புகளில் நீக்கப்படும்

கேள்வி: மறுபடியும் மன்றத்தில் சேர யாராவது என்னிடம் பேசுவார்களா ? பதில்: யாரும் பேச மாட்டார்கள், தேதியை நினைவில் வைத்திருப்பது உங்கள் கடமை.

கேள்வி: தலைமை அலுவலகம் எங்குள்ளது ? பதில்: தமிழுக்கான வெள்ளை அறை , சென்னை அண்ணாநகர் , இந்தியா

கேள்வி: பதவிகள் ஏதாவது உள்ளதா ? பதில்: உள்ளது. மன்றத்தின் அறங்காவலர்கள் மூவர் – (1) திரு கவி செங்குட்டுவன் (ஊத்தங்கரை, தமிழ்நாடு) (2) திரு பறம்பு நடராசன் (காரைக்குடி, தமிழ்நாடு) (3) திரு அஸ்ரப் அலி (மணப்பாறை, தமிழ்நாடு) . ஐம்பெருங்குழு (5 நபர் உயர்மட்ட குழு) – (1) பேராசிரியர் டாக்டர் செம்மல் முஸ்தபா (சவுதி அரேபியா) , (2) திரு. அறிவழகன் (பிரான்ஸ்), (3) திரு. சுதர்சன் மீனாட்சி (கனடா) , (4) இன்னும் நிரப்பப்படவில்லை , (5) இன்னும் நிரப்பப்படவில்லை. எண்பேராயம் (8 நபர் உயர்மட்ட குழு) – (1) திரு வெற்றிவேல் (சவுதி அரேபியா) , (2) பொறியாளர் தமாம் பாலா (3) திருமதி வேலம்மாள் (4) திருமதி ஆனந்தி ஜீவா (5) இன்னும் நிரப்பப்படவில்லை (6) இன்னும் நிரப்பப்படவில்லை (7) இன்னும் நிரப்பப்படவில்லை (8) இன்னும் நிரப்பப்படவில்லை.