முனைவர் திருமதி இராஜேஸ்வரி தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்விருக்கை

முனைவர் திருமதி ராஜேஸ்வரி மொழிபெயர்ப்பாளர் பதிப்பாளர் எழுத்தாளர் ஆவார். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர். இதுவரை 78 நூல்கள் எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ளார். பாரத ரத்னா எம்ஜிஆர் பற்றி 21 நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் 1959 ஜூலை முதல் நாள் மதுரையில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் பொ. செல்லையா கோனார், தங்கத் தாயம்மாள். இவர்கள் சிறு வயது முதல் இவருக்கு கல்வியில் ஆர்வத்தை ஊட்டி கல்விதான் அழியாத செல்வம் என்ற கருத்தை மனதில் பதிய வைத்தனர். மொழிபெயர்ப்பியலில் Ph. D பட்டம் பெற்ற இவர் . 40க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை செய்துள்ளார். உலகளவில் இளம் தலைமுறையினருக்குத் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் ஐங்குறுநூறு, குறுந்தொகை, புறநானூறு, நாலடியார், ஆசாரக்கோவை, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடல் பள்ளு ஆகிய நூல்களை மொழி பெயர்த்த்தார். லவ் தமிழ் என்ற ஆங்கில பன்மொழி மின்னிதழின் ஆசிரியர் ஆவார்.