“ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் புத்தகப் பை திட்டம்”
திட்டத்தின் விளக்கம்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயக்கத்தில் இருக்கும் திட்டம் இது. ஒரு பை நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் இருக்கும். அந்தப் பை பல இடங்களுக்கு இடம் பெயரும். உதாரணமாக, நார்வே நாட்டில் ஒஸ்லோ நகரை எடுத்துக் கொள்வோம், அந்த நகரில் சில தமிழர்களே வசிப்பார்கள் அதனால் ஒரு தமிழ் நூலகம் தனியாக அவர்களுக்கு இருக்காது, பரவாயில்லை. இந்தப் பை நிறைய நூல்கள் இருக்கும் (சுமார் 50) (சுமார் 5 கிலோவுக்கு குறைவாக), ஒரு வாட்சப் குழுமத்தை அமைத்து ஒஸ்லோ பகுதியில் உள்ள தமிழர்கள் தமது வீடுகளுக்கு அந்தப் பையை சுழற்சி முறையில் அனுப்பி வைப்பார்கள். ஒருவர் வீட்டில் உள்ள பை அதிகமாக 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் இருக்கலாம், அவர் அடுத்த தமிழரின் வீட்டிற்கு பையை எடுத்துச் சென்று வழங்குவார், அதுபோது அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் “பையில் உள்ள நூல்களை விளக்குவார்” (தேநீர் அருந்தும் நேரத்தில்) – மீண்டும் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் அடுத்த வீட்டிற்கு நூலை எடுத்துச் செல்வார்கள்.
.
By rotation the bag will be moving in the community. Like a relay race, the person bringing the bag must be offered a cup of coffee and a small chat has to be initiated with the kids of the home. when a book is torn the Head office will replace it, if a book is missing the leader of the home will replace it. after some rounds the books will be periodically replaced by the International Applied Tamil Team. a small book and pen in the bag will be used for travelling documentation of the bag. – Applied Tamil team will sponsor this module.

இந்த திட்டம் (20.10.2021) சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் துவங்கப்பட்டது. ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் எண்பேராய உறுப்பினர் உயர்திரு வெற்றிவேல் அய்யா அவர்கள் திட்டத்தை துவங்கி வைத்தார்கள். நமது மன்றத்தின் உறுப்பினர் உயர்திரு அன்புமிகு சிவா அய்யா அவர்கள் நூல்களை பெற்றுக் கொண்டார்கள். இருவருக்கும் வாழ்த்துகளை பதிவு செய்வதில் அறிவியல் தமிழ் மன்றம் பெருமிதம் கொள்கிறது.