ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் வரலாறு – சாதனைகளும், வேதனைகளும்

ஒடுக்கபட்ட மக்களை ஒரு பைசாவுக்கும் பெறாதவர் என கேவலமாக பேசும் சமூகத்தில் ஒரு பைசா தமிழனை முழுமையாக அறிந்தால் ஒரு கோடி பொன் என்று பேச வேண்டும் என்று விரும்பி அயோத்திதாச பண்டிதர் “ஒரு பைசா தமிழன்” என்று இதழ் ஒன்றினை (19.06.1907) துவங்கினார்.
இன்று தமிழ்ச் சமூகம் நிறையவே மாறியுள்ளது.
தமிழர்கள் மிகப்பெரிய உயரங்களை உலகம் முழுவதும் அடைந்துளார்கள்.
ஆனால்,
தமிழின் நிலை ?
ஆன்மிகம் தவிர்த்த தமிழர்களின் மரபுகளின் நிலை ?
தமிழர்களின் இசையின் நிலை ?
தமிழர்களின் வாழ்வியல் நிலை ?
தமிழர்களின் விளையாட்டு ?
இவை போதுமான முன்னேற்றம் அடைந்துள்ளதா ?
.
தமிழர்களின் ஆன்மீகம் , தமிழர்களின் உணவு முறைகள்
சற்று பாதுகாப்பினை பெற்றுள்ள நிலையில்
விடுபட்டவற்றை முன்னிறுத்தும் பணியை
23.11.2017 துவங்கப்பட்ட
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்
முன்னிறுத்துகிறது
.

26.12.2021 முதலாக – ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் கடந்து செல்லும் பாதை முழுவதுமாக ஆவணப்படுத்தப்படும்