appliedtamil@gmail.com

அறிவியல் தமிழ் மன்றத்தின் திட்டங்கள் (Last Updated On 18.01.2022)

Transparency is Our Greatest Attribute, We make all our accounting completely visible to the whole of Humanity. This web page will provide the reader the Complete Details of the Scientific Tamil Development Activities Accomplished by the Applied Tamil Team.

அறிவியல் தமிழ் மன்றத்தின் பல்வேறு திட்டங்கள்

Various Projects of the International Applied Tamil Team

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் தனது உறுப்பினர்களிடம் தினமும் ஒரு ரூபாய்க்கு மேலாக பெறாது. மன்றத்தின் உறுப்பினர்களிடையே உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த அமைப்பு முறை. ஆனாலும், பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள – தமிழுக்கு அதிகமாக கொடுக்க விரும்பும் புரவலர்களிடமிருந்து திட்டங்களுக்கு உதவி நிதியை மன்றம் பெறுகிறது.  இவ்வாறு பெறப்படும் உதவித்தொகை மன்றத்தின் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் – மன்றத்தின் தினசரி செயல்பாடுகளுக்கு எந்த சூழலிலும் பயன்படுத்தப்படாது. உறுப்பினர்களின் எண்ணங்களை ஓட்டுப்பதிவு மூலம் பெரும் நிலையில் – உதவித்தொகை தருபவர்களுக்கு சிறப்பான சலுகைகள் வழங்கப்படாது.

          உங்களுடைய பொருளாதார உதவி கீழுள்ள திட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும், எந்த திட்டத்திற்கு எவ்வளவு பயன்பட்டது என்று அவ்வப்பொழுது உங்களுக்குத்   தெரிவிக்கப்படும். நமது இணையத்தளத்தில் https://appliedtamil.com/projects/

என்னும் பக்கத்தில் 24 X  7 கணக்குகள் வெளிப்படையாக இருக்கும்.

Project ID: IATTP1  

அறிவியல் தமிழ் மாணவர் பேச்சுப் போட்டிகள்

Scientific Tamil Oration Competition by School and College Students

தலைப்பு: நவீன உலகில் தமிழிலக்கியம் / நவீன அறிவியல் துறைகள்; யார் பங்கேற்க முடியும் ? : மாணவர்கள் (பள்ளி, கல்லூரி); வழிமுறை: நேரலை – பிரதி வாரம் வெள்ளிக்கிழமை – மாலை 07:30 இந்திய நேரம் – Zoom செயலி – Powerpoint Presentation Screen Sharing; நடுவர் குழு நிகழ்வினை அறுதியிட்டு மதிப்பெண்கள் வழங்கும்.; முதல் பரிசு 500 ரூபாய் அல்லது அதற்கு நிகரான மதிப்புள்ள நூல்கள்; இரண்டாவது பரிசு 300 ரூபாய் அல்லது அதற்கு நிகரான மதிப்புள்ள நூல்கள்; மூன்றாவது பரிசு 200 ரூபாய் அல்லது அதற்கு நிகரான மதிப்புள்ள நூல்கள்; அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்.

.

Project ID: IATTP2: Big Data Tamil Project திட்ட விளக்கம்

Big Data Tamil என்றால் என்ன ?

21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற தமிழிலக்கிய ஆய்வுமுறையே  “Big Data Tamil Project” எனப்படுவதாகும். பொதுவான தமிழ் இலக்கிய ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது?

பொதுவாக தமிழ் இலக்கிய ஆய்வுகள் ஒரு சில ஆளுமைகளின்  ஆளுமைக்கு உட்பட்டு அவர்களின் கருத்தியலை ஒப்புக்கொள்ளும் நிலையில், அவர்களின் ஆளுமைக்கு கீழாக ஒரு சிறு குழுவின் மூலமாக, ஒரு சில தமிழ் சார்ந்த நிறுவனங்களின் நான்கு சுவருள்ள அறைகளுக்குள் மட்டுமே நிகழும். வெளி உலகிற்கு ஆய்வுகளின் சாரம் மற்றும் முடிவுகள் மட்டுமே கிடைக்கப்பெறும்.

ஆய்வு அறிக்கையின் முழுமையான முடிவுகளை ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் ஆய்வினை நடத்தும் நிறுவனத்தின் நிர்வாகிகள் மட்டுமே முடிவு செய்வார்கள். வெளி உலகில் வாழும் மற்ற அறிஞர்களுக்கு  மற்றவர்களுக்கு எவ்வித கருத்துக்கூறல் அமைவிற்கும் அனுமதியும் வாய்ப்பும் இருக்காது. மேலும், இவ்வித ஆய்வுகளுக்கு அறிஞர்கள்  வந்து செல்ல போக்குவரத்து செலவுகள் அதிகம் ஏற்படும். 20ஆம் நூற்றாண்டில் இதுதான் சாத்தியம் அதனால் இம்முறையை தமிழ்  சமூகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் முழுவதுமாக மாறிவிட்டது.

பண்டைய தமிழ் இலக்கிய ஆய்வுகளை 21 வித்தியாசமான குழுக்களை வைத்து, 21 கோணங்களில் நடத்தப்படும்  மாபெரும் ஆய்வுத் திட்டமே Big Data Tamil Project. கோணம் ஒன்று (பொதுவான அறிஞர்கள் ஆய்வு, Module 1), கோணம் 2 (பள்ளி மாணவர்கள் ஆய்வு, Module 2), கோணம் 3 (கல்லூரி மாணவிகள் ஆய்வு, Module 3), கோணம் 4 (உடல் மொழி விளக்கம், Module 5), கோணம் 5 (ஆங்கில உரைகள், Module 6), கோணம் 6 (தனிமனித விரிவுரைகள், Module 7). மேலும் பலவகையான முறைமைகளில் மொத்தமாக 21 கோணங்களில் ஆய்வுகள் நிகழும். ஆய்வுகள் அனைத்தும் மெய்நிகராக நிகழும், நேரலையில் நிகழும் – கோப்புகள் அறிவியல் தமிழ் மன்றத்தின் YouTube தளத்தில் பத்திரமாக இருத்தப்படும்.

Project ID: IATTP2:

Project ID: IATTP2A: பொது அறிஞர்கள் குழு மேற்கொள்ளும் சங்க இலக்கிய மெய்நிகர் ஆய்வுகள் – Virtual Research of Ancient Tamil Literature by General Stream Scholars (Module 1 of the Big Data Tamil Project)

Project ID: IATTP2B: பள்ளி மாணவர்கள் மேற்கொள்ளும் சங்க இலக்கிய மெய்நிகர் ஆய்வுகள் – Virtual Research of Ancient Tamil Literature by School Students (Module 2 of the Big Data Tamil Project)

Project ID: IATTP2C: கல்லூரி மாணவிகள் மேற்கொள்ளும் சங்க இலக்கிய மெய்நிகர் ஆய்வுகள் – Virtual Research of Ancient Tamil Literature by College Girl Students (Women Only Team) (Module 3 of the Big Data Tamil Project)

Project ID: IATTP2D: சங்க இலக்கியங்களுக்கு உடல் மொழி விளக்கம் அளிக்கும் திட்டம். Virtual Research Explaining Ancient Tamil Literature as Body Language by a team of Qualified Classical Dancers and Singers (Module 4 of the Big Data Tamil Project)

Project ID: IATTP3: மெய்நிகர் அறிவியல் தமிழ் விளையாட்டு. Scientific Tamil Virtual Games (Quiz Events on Sat & Sun) மெய்நிகர் அறிவுசார் கேள்வி பதில் விளையாட்டு. அயலான் விமான கம்பெனியின் விமானங்களுக்கு இடையே  நிகழும் போட்டிகள் இவை. சரியான பதில் கூறினால் 10 ரூபாய், தவறான பதில் கூறினால் (-Minus 5) ரூபாய், யாரும் பதில் சொல்லாமல் இருந்தால் வினவியருக்கு 10 ரூபாய் என்று பரிசுகள் வழங்கப்படும். 

Project ID: IATTP4: தமிழ்ப் பெருநூல் திட்டம் – Construction of the Big Book for Tamil (An Initiative to Safeguard the Intellectual Acumen of Tamils) –  ஒரு ரூபாய்த் தமிழர்கள் திட்டம் – தமிழ் சமூகத்தில் மிகப்பல ஆளுமைகளின் அறிவுசார் தரவுகள் கால ஓட்டத்தில் அழிந்துவிடாமல் தடுக்கும் திட்டம் இது. பல ஆயிரம் பக்கங்கள் நீளும் Creative Common Domain – அமைப்பில் உள்ள பல நூறு நூல்களை உருவாக்கும் பெருந்திட்டம் இது.

Project ID: IATTP5: Lateral Thinking Training Module for Tamils – ஒரு படத்தை பகிர்ந்து அதன் மூலமாக வருகின்றத் தரவுகளை ஒருங்கிணைத்து தமிழர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று அறுதியிடும் ஆய்வுத் திட்டம் இது.

Project ID: IATTP6: மெய்நிகர் தமிழ்ப்பள்ளி – Tamil Virtual School (Network of Virtual Classrooms providing Quality Education for Tamil Children Across the globe is the Lowest Imaginable Fees (10 Rs per Session) (0.13 USD) (0.17 CAD) – தமிழகத்தில் வாழும் திறன் வாய்ந்த ஆசிரியர் குழுவின் துணை கொண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு தரமான தமிழ் மொழிசார் கல்வியை மிகவும் குறைவான தொகையில் வழங்கும் திட்டம் இது. இலவசமாக வழங்குவது ஆர்வத்தை குறைக்கும் என்பதால் மிகவும் குறைவான தொகை வாங்கப்படும். இந்த பள்ளிகள் பொருளீட்ட நடைபெறும் பள்ளிகள் அல்ல, மாறாக மன்றத்தின் நிதி உதவியை உலகத் தமிழர்களுக்கு வழங்கும் திட்டம் இது.

Project ID: IATTP7: நினைவு சொற்பொழிவுகள் – Scientific Tamil Virtual Memorial Lectures – அறிவியல் தமிழ் மன்றத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள நெடுநாள் உறுப்பினர்களின் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் நினைவாக நினைவு சொற்பொழிவுகளை மன்றம் நடத்தும். அதற்கு தேவையான உதவித் தொகையாக 250 ரூபாய் வழங்கப்படும். உரைகள் காணொளிகளாக பாதுகாக்கப்படும். உரைகள் பெருநூலில் பதிவாகும்.

Project ID: IATTP8: நிறைவான இன்பம் திட்டம்

திட்டம் துவங்கப்பட்ட நாள்: 08/05/2022 (70% Votes). தமிழ் சமூகத்தில் வழமையாக இணைய முடியாமல் தவிக்கும் மூன்று புள்ளிகளை இணைக்கும் திட்டம். புள்ளி 1 – பொருளாதார சிரமத்தில் உள்ள மாணவர்கள் (பள்ளி / கல்லூரி); புள்ளி 2 – தர்மம் செய்வது மனிதர்களுக்கு கட்டாயமானக் கடமை என்று ஏற்கும் நல்ல உள்ளம் கொண்ட திறனுள்ள ஆளுமைகள்; புள்ளி 3 – தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் உள்ளது, “என்னிடம் போதுமான செல்வம் உள்ளது அதனை சரியான நோக்கத்திற்கு செலவு செய்வது அறிவுடைமை – ஆனால் நேரடியாக தமிழ்ப்பணி செய்ய என்னிடம் நேரம் இல்லை – சரியான தமிழ்ப்பணியை யாராவது செய்தால் துணை நிற்க  விருப்பம்”  என்று ஏற்கும் தமிழர்கள். ; இந்த மூன்று புள்ளிகளையும் உண்மை – வெளிப்படைத்தன்மை ஆகிய அறம் சார்ந்த நிலைகளுடன் இணைப்பதுதான் நிறைவான இன்பம் திட்டம்.

திட்ட விளக்கம்: ஒரு மாணவர் தனது அடிப்படை கல்விக்குத் தேவையான புத்தகம் வாங்க, தேர்வு கட்டணம் செலுத்த சிரமத்தில் இருந்தால் அவர்களது நண்பர்கள் ஒரு தமிழ் நுண் பயிலரங்கம் நடத்துவார்கள். அதற்கு மன்றம் தரும் 150 ரூபாய் தொகையை, நேரடியாக நூல் நிலையத்திற்கு / கல்வி நிலையத்திற்கு சென்று சேர ஒப்புதல் வழங்குவர். இதனால் தேவையுள்ள மாணவர் பயன் பெறுவர். உண்மையான நட்பிற்கு புதிய பயன்பாட்டினை இந்தத் திட்டம் தருவிக்கும். வாழ்க நல்ல நட்பு. வாழ்க அறிவியல் தமிழ். 

Project ID: IATTP9: Sanmarka Project

This Project is Exclusively Funded by the Sanmarka Sangam Paris, France. Operational Design: 1.To Call for and collect Research Articles related to Sanmarkam, 2. To Fix a Zoom event for publishing the document by LIVE Presentation, 3.To save the article make a separate Book when 100 pages are reached, 4. Project Director – Thiru Arivalagan Paris

Project ID: IATTP10: இணையமே இன்றய கல்வெட்டு
தமிழறிஞர் வாழ்க்கை ஆவணப்படுத்தும் திட்டம்

.
(1) தமிழறிஞர்கள்
(2) தமிழ்த் தொண்டாற்றியவர்கள்
(3) தமிழ்நாட்டு மக்களுக்கு துணை நின்றவர்கள்
.
Under clause 3 of the project – Senior Medical Practitioners who have done their medical practice for more than 25 years Inside the State of Tamilnadu will be eligible to the archive.
.
அடுத்த தலைமுறை தமிழர்கள் சரியான சரித்திரத்தை அறிந்துணர இன்றைய காலத்தில் வாழும் அறிஞர்களை ஆவணப்படுத்த வேண்டியது நமது கடமை. தமிழறிஞர்களின் வாழ்க்கை ஆவணங்கள் – இணையமே இன்றைய கல்வெட்டு – திட்ட விளக்கம் – Dr. செம்மல் முஸ்தபா – https://youtu.be/CZgVvbi47GE
.
மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை 2015ஆம் ஆண்டு துவங்கிய திட்டம் இது. இன்று வாழும் தமிழறிஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம். ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் கட்டமைப்பு அறிஞர்களை தெரிவு செய்வதற்குப் பயன்படும். கீழுள்ள 10 கேள்விகளுக்கு உரிய விடைகள் மட்டுமே கோப்பினில் ஏற்கப்படும்.இந்த வரிசை முறை என்றும் நிலையானது.

அறிஞர்கள் பெயர் முன்மொழிவு படிவம்
https://forms.gle/vEjAY5CuN8xSixmQ9
.
(3) தமிழ்நாட்டு மக்களுக்கு துணை நின்றவர்கள்
12 Standard Questions .
1.பிறந்த ஊர், குடும்பம் பற்றி ?
2.படித்த கல்வி நிலையங்கள், நினைவில் உள்ள ஆசிரியர்கள் பற்றி ?

Roles and Commitment:
International Applied Tamil Team – Select the resource person
Toe Foundation – Financial Assistance
Scientific Tamil Virtual Chair – Planning and Execution of the Project
Cost Fixed per video file = 500 Rs
.
Project ID: IATTP11: Ancient Tamil Literature on Twitter

Daily one part of sangam Literature to be tweeted with meaning alone in English. Internet expense and effort time expenses will be paid by the International applied Tamil team. Phase one 5-year duration. Any member can participate. Remuneration Payment can be adjusted with extension of subscription (Optional). Project was proposed by Prof Dr Semmal Mustafa on 28.05.2022 from Medina, in a lightning speed the proposal was accepted by the team on the same day and the first tweet found its surface on the same day. The First Accepted Literature for the project by the team is Thirukkural. The Project will extend for 1330 Days from 28.05.2022 to 17.01.2026.

Project ID: IATTP12:
தமிழ் நுண் பயிலரங்கம்
Tamil Nano Workshop

தமிழ் சமூகத்தில் மூன்று முக்கியமான சிந்தனை மாற்றங்களை விதைக்கிறது

  1. தமிழ் நிகழ்வுகளில் செயற்கையான பிரம்மாண்டம், பகட்டு, பொய்மை தேவையில்லை
  2. 150 ரூபாய்க்கு ஒரு நிகழ்வு அதாவது (TNW Efficiency Score) 13.75 Rs செலவில் தமிழர் ஒருவருக்கு அறிவியல் தமிழறிவை வழங்கிட முடியும்
  3. சாமானிய மக்களின் சிறு குழுக்களும் தமிழ் வளர்த்திட முடியும்.
    .
    தனித்துவமான கட்டமைப்பு
    Unique Design of the Tamil Nano Workshop
    .
    1.அறிவுசார் திறன் வளர்ப்பு முறைமை
    2.ஏழு நபர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
    3.இந்நிகழ்வுகளை நடத்த ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் பொருளாதார உதவிகளைத் தரும்.
    4.நிகழ்வு ஒன்றிற்கு 150 ரூபாய் வழங்கப்படும்.

தமிழ் நுண் பயிலரங்கம் என்றால் என்ன ?
வெறுமனே ஏழு சொற்களை வைத்து உலகை அசைத்து விளையாடிய வள்ளுவத்தின் அமைப்பை உள்ளது உள்ளவாரே உளவாங்கி அறிவியல் தமிழுக்காக வடிவமைக்கப்பட்ட முறைமை.
.
எத்தனை பயனாளர்கள் ஒரு நிகழ்வில் அனுமதிக்கப்படுவார்கள் ?

ஒரு நிகழ்வில் ஏழு நபர்கள் பங்குகொள்வார்கள் (அதிகமானவர்கள் வந்தால் வாழ்த்துகள்).
.
தமிழ் நுண் பயிலரங்க நிகழ்வு எவ்வாறு அமையும் ?
நிகழ்வில் 10 பகுதிகள் இருக்கும்
(1) தமிழ்த்தாய் வாழ்த்து
(2) நிகழ்வினை முன்னின்று நடத்தும் ஆளுமை நிகழ்வின் தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்குவார்.
(3) நிகழ்வின் ஆளுமை தன்னுடைய அறிமுகத்தைத் தானே கூறுவார்
(4) பயிலரங்கப் பயனாளர்கள் தம்மைப் பற்றி சுய அறிமுகம் செய்வார்கள்
(5) பயிலரங்கம் துவங்கும் (40 – 60 நிமிடங்கள் மட்டுமே)
(6) “இன்று என்ன கற்றோம்?” என்று பயிலரங்கக் கோப்பில் பயனாளர்கள் எழுதுவார்கள்
(7) முதலில் பயிலரங்க நிகழ்வுக்கு வந்தவர் நன்றியுரை கூறுவார்
(8) அடுத்த பயிலரங்கம் பற்றிய சிறு கலந்தாய்வு
(9) தேநீர் நேரம்
(10) புகைப்பட நேரம்

தமிழ் நுண் பயிலரங்கை நடத்துவது யார் ?
மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை வடிவமைத்து அறிமுகம் செய்த திட்டம் இது.
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் தனது பொருளாதார துணையை வழங்கி நிகழ்வுகளை நடத்தும்.
பயிலரங்கக் கோப்பினை அனுப்பி வைக்கவும்.
.
நிகழ்வின் பொருளாதாரத் துணை எவ்வளவு ?
ஒரு நிகழ்வுக்கு 150 ரூபாய் வழங்கப்படும்.

எங்கெல்லாம் இந்தப் பயிலரங்கம் நிகழலாம் ?
1.சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழுக்கான வெள்ளை அறையில். 2.உலகம் முழுவதும் வாழும் அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர்களின் இல்லங்களில். 3.அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர்கள் பணியாற்றும் பள்ளிகள், கல்லூரிகள். 4. அறிவியல் தமிழ் மன்றத்துடன் புரிந்துணர்வில் உள்ள தமிழமைப்புகளில்.

தமிழ் நுண் பயிலரங்கின் எதிர்காலத் தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் என்னவாக இருக்கும் ?
1.பெருங்கூட்டம் மட்டுமே தமிழ்ப் பயிலரங்கம் நடத்த முடியும் என்கிற சிந்தனை தகர்க்கப்படும்.2. செல்வந்தர்களைச்சார்ந்து தமிழ் நிகழ்வுகள் நடப்பது குறையும். 3..சில அல்லது பல நிறுவனங்களில் உள்ளிருந்துகொண்டு தமிழ் செய்கிறேன் என்று சொல்லித் திரியும் போலிகளின் பொய்ப்பிம்பம் கிழித்து எறியப்படும். 4 சிறு குழுக்களால் வலிமையுடன் தமிழ் வளர்க்க முடியும் என்று நிறுவப்படும்.
5..110+ நாடுகளில் வாழும் தமிழர்களும் (ஒரு சிலர் வாழும் நாடுகளிலும்) தமிழ் சார்ந்த பயிலரங்கை நடத்த முடியும் என்று நிறுவப்படும். 6 தனி மனிதர்களின் வீடுகள் தமிழ் செய்யும் இடங்களாக மாறும் நிலையில் தமிழ் மாபெரும் உயரத்தை அடையும். சிரிப்புப்பட்டிமன்றம், சினிமா சார்ந்த நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் உதறித்தள்ளும் இனிய மாற்றுச்சூழல் உருவாகும்.
.
NWCC (Nano Workshop Clearance Committee)
Chairman – Mr Durai Dhanapalan
Members – 1. Mr Shahul (Finance related issues)
2. Mrs Lakshmi Saravanan (Women Team Representative)
3. Er Bala (Engineering Related Issues)
4. Dr Semmal (Medical Related Issues)

Work to be done:

  1. Shortlisting the titles of TNW ; 2. Smooth delivery of Funds; 3. Rationing of the funds to all members

What will happen if a person fails to claim the money before the end of the Membership period?
The unclaimed money will be returned to the IATT accounts and will be used for other projects by other members.

What to do if a person is busy and has no time to do any activity to claim the fund during the membership period?
The member can authorize any other member to conduct an activity and claim the money on his / her behalf. This authorization MUST be via email only (appliedtamil@gmail.com). The mail must be specifically titled as “Give my rightful claim of amount to __ (Member name)”

When can a person arrange a TNW?
On his/ her Birthday, Marriage Anniversary, Special Days in Life.

Applied Tamil Task Room : Key to enter the room: https://chat.whatsapp.com/FKpL1zKYjo053T7412sWgT
.
Project ID: IATTP13:
புலன உலக நுண் திறன் பயிச்சிப்பட்டறை
Voice Message Training Module 2 of Tamil Skill Lab – TSL2

தமிழர்கள் எதிர்வரும் காலங்களில் புலனத்தில் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் இதற்குத் துணை நிற்பது ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் நோக்கம் இதற்கென வடிவமைக்கப்பட்ட திட்டம். ஒலி வடிவச் செய்திகளை புலனத்தில் உருவாக்க இலவசமாக பயிற்சித் தரப்படும். ஏழு வகையான சூழல்களில் புலனத்தில் எவ்வாறு செய்திகளை உருவாக்க வேண்டுமென மன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக பயிற்சித் தரப்படும்.


Project ID: IATTP14:
Tamil Skill Timeline Project

First Time in the History of Tamil Education the Tamil Skill Timeline of a Child will be digitally Archived by a School – Since 23/05/2022.
மெய்நிகர் தமிழ்ப்பள்ளி – மாணவர் தர உத்தரவாத ஆவணத் திட்டம்.
Tamil Virtual School – Continuous Quality Assessment Documentation Cell.

எந்த ஒரு நிறுவனத்திற்கும் தர நிர்ணயம் மற்றும் உத்தரவாதம் மிகவும் முக்கியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு கல்விக்கூடமோ, பள்ளியோ தம்மிடம் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்துக்கு, கல்வி நிலை உயர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால், அதற்கு பள்ளிகள் பெருமையுடன் “நாங்கள்தான் காரணம்” என்று கூறி உரிமை கொண்டாடும். ஆனால் மாணவருக்கு வெற்றி கிடைக்காமல் போனால், நாளைய உலகில் உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமல் போனால் – பழி மாணவனையும் அவன் பெற்றோரையும் மட்டுமே சாரும். பள்ளிகள் மிக இலகுவாக கை கழுவி விட்டு தப்பித்து விடும்.
.
ஆனால் நமது மெய்நிகர் தமிழ்ப்பள்ளி இந்த விடயத்தில் மற்றவரை போன்றல்லாமல் மிக வித்தியாசமாக செயல்படும், தொழிற்சாலைகளில் காணப்படுவது போன்ற தரக்கட்டுப்பாட்டு வழிகாட்டுதல் அமைப்பு முறை (ITP- Internal Testing Plan for Quality) பள்ளியில் இயக்கத்தில் இருக்கும். கடந்த காலங்களில், நமது வகுப்புகள் மாணவருக்கு சரியாகவோ அல்லது மிகையாகவோ, சில சமயம் பாடத்திட்டம் மாணவனின் வயதுக்கு அப்போதைய அறிவு வளர்ச்சிக்கு அதிகமாகவோ இருப்பதாக, பெற்றோர் சொன்னால் மட்டுமே நமக்குத் தெரிய வரும். சில பெற்றோர் சபை நாகரிகம் கருதி சொல்லாமலும் போக வாய்ப்புகள் உண்டு.
.
இதற்கு ஒரு தீர்வாக, மன்றம் 3 மாதத்திற்கு ஒருமுறை மாணவரின் செய்முறை தேர்வையோ அல்லது அவனது/அவளது பேச்சின் காணொளியையோ தொடர்ந்து பதிவு செய்து அதை பாதுகாப்பாக வைத்திருக்கும் முறைமையை மெய்நிகர் பள்ளி முன்னெடுக்கும். இந்தக் காணொளிகள், மெய்நிகர் பள்ளியின் தலைமை ஆசியர் மற்றும் ஆசியர் குழுவினர் மட்டுமே காணும் நிலையில் பாதுகாப்பாக இருத்தப்படும். மாணவரின் தொடர் முன்னேற்றம் மற்றும் பெற்றோரின் திருப்திக்கு உத்தரவாதம் தரும் வகையில் ஆசிரியரின் செயல்பாடு உள்ளதா என்று சரி பார்க்க இம்முறை உதவும்.
.
மாணவரின் காணொளி 3 மாதத்துக்கு ஒரு முறை பெற்றோரிடமிருந்து அவர்களின் ஒப்புதலுடன் பெறப்படும். காணொளிகள் மெய்நிகர் பள்ளியின் மெய்நிகர் பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். இதற்காக மன்றம் பெற்றோரிடம் எந்தவித தனியான தொகையையும் பெறாது. தமிழ் அழகு, தமிழோடு வளரும் குழந்தைகளும் அழகு. அந்த அழகுக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை உறுதி செய்வதே நமது மெய்நிகர் தமிழ்ப்பள்ளியின் முதன்மையான நோக்கம். நன்றியும் வாழ்த்துகளும்.
.
We will construct a timeline for the student
We will not remind you about the date to send a new file
As a responsible parent, it is expected from you to remember the date and send the file
Failure to receive the file on time will disrupt the archiving of the timeline of the student
Content for the file and specifications for the file can be received from the Tamil Virtual School Teacher: Mrs Prabha
.
This file will be accessible only to the School Authorities and the parent.
The contents will be saved in our repository until the student completes his age of 21 years.

How to Send the Video to Tamil Virtual School?
Step 1 – Parents to Send the file to the Teacher or Send Directly to us
Step 2 – Log into Google Drive using your gmail ID
Step 3 – Upload the file into the drive
Step 4 – Share file with virtualtamileducation@gmail.com and provide editor rights.

தமிழ் மெய்நிகர் இதழாய்வுக் குழுமம்
.
இந்தக் குழுமத்தின் நோக்கம் என்ன ?
.
Big Data Tamil, தமிழக் கூரியர் ஆகிய இரு திட்டங்களை சார்ந்த அறிவியல் தமிழ் மன்றத்தின் பணிகளை ஒருங்கிணைப்பது. ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் மூலமாக Big Data Tamil திட்டத்திற்கு சென்று சேரும் பகுதிகளை கண்காணிப்பது, தர நிர்ணயம் செய்வது. பண்டைய தமிழ் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வது, நவீன அறிவியல் மற்றும் மொழியியல் இதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளை பொதுமக்களின் இயல்பு மொழியில் வெகுஜன புரிதலுக்குக் கொணர்வது. .
தலைவர் – உயர்திரு கவி செங்குட்டுவன்
உறுப்பினர்கள் – திரு பறம்பு நடராசன் ; திரு அஸ்ரப் அலி
.
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் மூலமாக பண்டைய தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறைத் தமிழர்களின் நலனிற்காக youtube, audiobooks வடிவத்தில் உருவாக்கும் நமது big data tamil திட்டத்தில் தற்பொழுது நடைபெறும் செயல்பாடுகள்,

  1. புறநானூறு மெய்நிகர் ஆய்வு
  2. திருக்குறள் சீர் பிரித்து அறியும் முறைமை
  3. நாலடியார் ஆங்கில விளக்கம்
  4. திருக்குறள் ஆங்கில விளக்கம்
  5. திருமூலர் திருமந்திர மெய்நிகர் ஆய்வு
  6. சீறாப்புராணம் மெய்நிகர் ஆய்வு

Project ID: IATTP15:
ஆனந்தம் தமிழ்த்தாய் திட்டம்

.
Project name: Aanandham – Thamizhthaai Thittam
.
Proposed by: Prof Dr Semmal on 15/06/2022
.
Proposal Explained: Selected Students will be admitted into the Project When entering Class Seven (School Students) When Entering Second year of BA Tamil (College Students) When Entering MA Tamil (College Students)
.
Every month the selected student MUST participate in the Oration Competition
One Talk per month; 500 Rs will be paid to the account (not in hand) ; After 2 years student will get 12,923.41 Rs
(Amount Paid = 12,000, Interest by Government 923.41 Rs)
.
Step by Step details of the Project:

  1. The best of the best Student with financial difficulty in the family will be selected by the Applied Tamil Team Board of Directors.
  2. The Student will be given recurring chances to participate in the scientific Tamil oration competition conducted every Friday evening at 0730 PM
    3.Monthly ONCE the student has to deliver a speech
  3. Monthly once Rs 500 will be paid to the student account in the post office by the CFO
  4. After 24 months the final amount will be given to the mother of the student in the presence of the student.
  5. School girl students entering class 7 and MA Tamil UG Girl Students entering second year will be eligible to join the project.
  6. Each student will have a mentor from the board of directors
  7. The Mentor will motivate and coordinate the student to deliver once in 30 days
  8. In exceptional cases the friends of the student can present on behalf of the student, still payment will go to the original account only.
  9. If the student defaults in presentation the mentor will pay that month’s installment and mandram will not pay for that month.
    .
    Policy on Identity of the Beneficiary – “The identity of the student will be known in an Institute only to the HOD, Every month payment of 500 Rs for Tamil Activities by the Concerned student will be sent to the HOD and the HOD will maintain the Post Office Recurring Deposit PassBook in her department space confidentially and will hand over the Final amount to the Student at the End of the Project. Student name will not be declared to other students and to Social Media. The Final handing over of money image will NOT BE SHARED with the Public and will be shared only with the Board of Directors”
    .
    Project ID: IATTP16:
    உரிமை உடைத்திவ் வுலகு திட்டம்
    (குடும்பத்தலைவியர், மூத்தோர் சிறப்பு நுண் பயிலரங்கத் திட்டம்)
    Housewife’s and Elders Special Nano Tamil Project

    .
    Proposed by: Prof Dr Semmal on 18 October 2022
    Proposal Explained: Housewives more than age 40 and Elders above age of 60 are only eligible. Subsidized Membership Fee for them is 100 Rs per year. Daily Subscription = 0.27 Rupees Only (27 Paise). 150 Rs will be paid per workshop
    Permission to conduct Multiple Workshops will be decided by Board of Directors based on performance (Title name, Number of participants, Report). Maximum Eligibility is 4 workshops per year.
    .
    Project ID: IATTP17:
    தமிழ்க் கூரியர் திட்டம்

திட்ட விளக்கம் : உலகின் மிக முக்கியமான அதி நவீன அறிவியல் இதழ்களில் வெளியாகும் அதிநவீன உயர் ரக மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை எளிய தமிழில் சாமானிய மக்களும் புரிந்துணர வழிவகை செய்யும் திட்டம்.
.
யார் இந்த திட்டத்தின் செயலாக்கர் ?
பேராசிரியர் டாக்டர் செம்மல் முஸ்தபா. திட்டம் துவங்கப்பட்ட நாள்: 25/03/2022. இந்தத் திட்டம் சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகரில் துவங்கப்பட்டது.
.
Project ID: IATTP18:
‘அறிவியல் தமிழ்ச்சோலை”’
20th Century Tamil Book Review Project by
The International Applied Tamil team

திட்ட ஒருங்கிணைப்பாளர்: ஓவியர் & கவிஞர் – திரு. அஸ்ரப் அலி
.
The Event will be a book review design with clear design to be followed meticulously. Participants will be detailing the experience of reading a Well acclaimed book published during the 20th century (between 01/01/1901 to 31/12/1999).

The Event will be having 5 basic parts
(1) Root (2) Stem (3) Branches (4) Leaves (5) Flowers and Fruits
.
Project ID: IATTP19:
அறிவியல் தமிழுடன் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்”

This is not just a Book review session by one individual but a detailed event for around 120 Minutes bringing out the complete beauty of the book experienced while reading it. Internet cost will be given to the participants. Session will be on Alternate Saturdays Nights at 7 PM Madurai Time.

திட்டத்தை முன்மொழிவது: பேராசிரியர் டாக்டர் செம்மல் முஸ்தபா
முன்மொழியப்பட்ட நாள்: தந்தை பெரியார் (17/09/1879) அவர்களின் பிறந்த தினம்
முன்மொழியும் IATT குழுமத்தின் பகுதி: மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை
திட்ட விளக்கம்: நம் தமிழ் சமூகத்தில் இன்றைய நிலையில் பிறந்தநாள் நிகழ்வுகளை – அரசியல் தலைவர்கள், மிகப்பெரிய செல்வந்தர்கள், சினிமா சார்ந்த புகழ்பெற்ற ஆளுமைகள் மட்டுமே கொண்டாடுவதாக உள்ளது. இந்நிலையை மாற்றும் மிகப்பெரிய சமூகப் பொறுப்பை ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் ஏற்கிறது.
.
தினமும் ஒரு ரூபாய் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரவர் பிறந்தநாளன்று சிறப்பு தமிழ் நுண் பயிலரங்கங்களை மன்றமே நடத்தும். இனி தமிழரின் பிறந்தநாள் ஒவ்வொன்றும் அறிவியல் தமிழ் வளர்க்கும் நாள்களாக அமையட்டும். தமிழ் சமூகம் புத்துயிர் பெறட்டும். சமூக நீதியை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளன்று இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தமிழ்த்தாய் முன் அனைவரும் சமம். சமூக நீதி காக்கப்பட வேண்டும்.

Project ID: IATTP20:
“மறைந்த உறுப்பினர்களுக்கான நினைவு பயிலரங்கம்”

திட்டத்தை முன்மொழிவது: பேராசிரியர் டாக்டர் செம்மல் முஸ்தபா. முன்மொழியப்பட்ட நாள்: 17 / 09 / 2022.
முன்மொழியும் IATT குழுமத்தின் பகுதி: மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கை
.
திட்ட விளக்கம்: இன்றைய வேகமான சமூகத்தில் யாருக்கும் எதற்கும் நேரமில்லை. ஒரு மனிதன் இறந்த பின்னர் அவரது நினைவை வருடாவருடம் மனதில் தாங்கி நிற்பது, அவரவரின் நெருங்கிய உறவினர்கள், உயிர்த்தோழர்கள், நன்றி மறவாத நட்புகள் மட்டுமே. அவர்களும் பொதுவாக ஆன்மீக நிகழுவலை நடத்திவிட்டு சென்றுவிடுவார்கள், ஆனால் இறந்தவரின் தமிழுக்கான கனவை யார் சுமப்பது ?

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் அந்தச் சுமையை அன்புடன் சுமக்கும். தினமும் ஒரு ரூபாய் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரவர் நினைவு நாளன்று அவர்களது சந்தா காலம் முடியும் வரையில், அவர்களின் நினைவு நாளன்று சிறப்பு தமிழ் நுண் பயிலரங்கங்களை மன்றமே நடத்தும். இனி தமிழரின் நினைவு நாள்கள் ஒவ்வொன்றும் அறிவியல் தமிழ் வளர்க்கும் நாள்களாக அமையட்டும். மரணம் இல்லாத பெருவாழ்வு தமிழ்ப்பணிக்கு கிட்டட்டும். தமிழ்த்தாயின் பிள்ளைகள் நாம். நம் தாய் நம்மை நினைவில் ஏற்று நிற்பாள்.
.
Project ID: IATTP21
தமிழ்துறைகளில் அறிவியல் தமிழ் நூலகம் உருவாக்கும் திட்டம்

Proposal by: Prof Dr Semmal
Date of Proposal: 15/11/2022
Proposal Explained: The Tamil related departments of the MOU Signed Institutes will be assisted by IATT to create or expand their Physical and Virtual Library. The Entire funding has to be procured exclusively via the Tamil Nano Workshop Module ONLY. The Fund paid for each TNW of 150 Rs can be used in part or full by the department. The success of the module depends on the managerial skills of the concerned Head of the Department.