நிறைவான இன்பம் அறிவுதானத் திட்டம்

நிறைவான இன்பம் – திட்டத்தின் கதை
17.12.2021 மாலை இறைவணக்கம் முடித்த நிலையில், நம் சமூகத்தில் இணைய முடியாமல் தவிக்கும்
3 புள்ளிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் என் மனம் அசைபோட்ட நிலையில் இத்திட்டம் என் மனதில் தோன்றியது. அம்மூன்று புள்ளிகளையம் விளக்கினால், நிறைவான இன்பம் திட்டத்தின் அவசியத்தை
நீங்களும் உள்ளுணர முடியும்.
புள்ளி 1 – பொருளாதார சிரமத்தில் உள்ள மாணவர்கள்
புள்ளி 2 – தர்மம் செய்வது மனிதர்களுக்கு கட்டாயமானக் கடமை என்று ஏற்கும் நல்ல உள்ளம் கொண்ட திறனுள்ள ஆளுமைகள்
புள்ளி 3 – தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் உள்ளது, “என்னிடம் போதுமான செல்வம் உள்ளது அதனை சரியான நோக்கத்திற்கு செலவு செய்வது அறிவுடைமை – ஆனால் நேரடியாக தமிழ்ப்பணி செய்ய என்னிடம் நேரம் இல்லை – சரியான தமிழ்ப்பணியை யாராவது செய்தால் துணை நிற்க விருப்பம்” என்று ஏற்கும் தமிழர்கள்.
இந்த 3 புள்ளிகளையும், நீதம் – உண்மை – வெளிப்படைத்தன்மை – ஆகிய அறம் சார்ந்த நிலைகளுடன் இணைப்பதுதான் நிறைவான இன்பம் திட்டம்.

18.12.2021 – உடனடியாக திட்டத்தின் செயலாக்கம் துவங்கியது. நிறைவான இன்பம் திட்ட விளக்க காணொளி வெளியிடப்பட்டது YouTube Video . மூன்று புள்ளிகளையும் அலங்கரிக்க துல்லியமான ஆளுமைகளை
அடையாளம் காணும் பணி துவங்கியது.

19.12.2021 – புள்ளி 1 – மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியை திருமதி வேலம்மாள் அவர்களின்
தலைமையில் இயங்கும் குழுவிடம் ஒப்படைக்க அறக்கட்டளை உயர்மட்ட குழு முழு மனதாக ஏற்றுக்கொண்டது. தன்னுடைய குழுவில் 2 பெண்களை இணைத்தார் திருமதி வேலம்மாள். திருமதி பிரபா, 2. திருமதி ஆனந்தி ஜீவா.

20.12.2021 – அறிவுதானம் திட்டம் துவங்கியது. முதல் நிகழ்வாக தன்னுடைய உரையைப் பதிவு செய்தார்
திண்டுக்கல் இராமசாமி துரைபாண்டி அவர்கள்.

நிறைவான இன்பம் | அறிவுதானம் 1|ஆற்றல் மறவன் | டயாலிஸிஸ் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது ?

நிறைவான இன்பம் | அறிவுதானம் 2 | Dr செம்மல் | அண்டத்தில் நிகழும் அனைத்திற்கும் காரணம் உள்ளது


நிறைவான இன்பம் | அறிவுதானம் 3 | திரு. இராமசாமி துரைப்பாண்டி | கணிப்பொறியியல் எனில் என்ன ?