MBBS in Tamil

For Videos Go to https://appliedtamil.com/mbbsintamil-videos/

MCQ Across MBBS Curriculum, Fill in the Blanks, Match the following & Technical terms

Q1

60 வயதுடைய முதியவர் நடக்கும் பொழுது தவறி விழுந்தார்,  அதன் தாக்கத்தால் அவருக்கு இடுப்பு மூட்டு விலகல் ஏற்பட்டது. பொதுவாக இடுப்பு மூட்டு விலகல் எந்தத்  திசையில் உருவாகும்?

1. முன்புறம் anterior

2. பின்புறம் posterior 

3. நடுவில் Central 

4. பக்கவாட்டில் lateral 

Q2

எந்த இரத்த செல் வகையில் HIV நுழைந்து பெருக்கமடைந்து தன்னுடைய சந்ததி வைரஸ்களை உருவாக்குகிறது?

A) “T” வெள்ளைக் குருதியணு

B) “B” வெள்ளைக் குருதியணு B- லிம்போசைட்டுகள்

C) நீலவெள்ளணு Basophil

D) சிவப்பூதாச் சாய உயிரணு (ஈசனோஃபில்கள்) Eosinophil

Q3

மனித மூளையின் செயல்பாடுகளை உருவகமாக வைத்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம்  இவற்றுள் எது ?

1) செயற்கை நரம்பியல் இணையம் ANN

2) பன்னடுக்கு நரம்பியல் இணையம் CNN

3) ஆழ் கற்றல் நரம்பியல் இணையம் Deep learning 

4) மீள் சுழற்சி நரம்பியல் இணையம் RNN

.

கண்டுபிடிக்கவும் (1) 

(1) இயல்பாக இதயம் ஓர் நிமிடத்திற்கு _______ முறை துடிக்கிறது.  

(2) சீரண மண்டலத்தின் நீளம் எத்தனை அடிகள் ?

விடைகள்  

Match the Following 

1 – 1 (0), 2 (0), 3(0)

கண்டுபிடிக்கவும்

1. 72

2. Length of GIT is = 30 Feet

Answer for MCQs

Q1 – (2) பின்புறம் posterior 

விளக்கம்: தொடை எலும்பின் தலை கிண்ணக்குழியை acetabulum விட்டு பின்பறமாக விலகும். 

Dr Hariharan 

.

Q2 – (A) “T” வெள்ளைக் குருதியணு

T லிம்போசைட்களினுள் (CD4+ செல்கள்) நுழைந்த எச்.ஐ.வி பெருகி சந்ததி வைரஸ்களை உற்பத்தி செய்து கொள்கின்றன. இவ்வாறாக வெளிவந்த சந்ததி வைரஸ்கள் இரத்தத்தின் மற்ற உதவி T செல்களையும் தாக்குகின்றன. இந்த நிகழ்வு தொடர்வதால் விருந்தோம்பியின் உடலில் உதவி லிம்போசைட் செல்களின் எண்ணிக்கைப் படிப்படியாகக் குறையத் தொடங்குகின்றது.

Dr Hariharan

.

Q3 – (1)  செயற்கை நரம்பியல் இணையம் ANN

மனித மூளையில் உள்ள நியூரான்களின் பல்வேறு நுண்ணிய செயல்பாடுகளை உருவகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது செயற்கை நரம்பியல் இணையம்

Dr Thendral

.

Reference: 

Medical Encyclopaedic Dictionary by Manavai Mustafa